Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய கிரிக்கெட் வீரர் மொஹமட் ஷமி மீது பொலிஸில் முறைப்பாடு!

In விளையாட்டு
Updated: 04:15 GMT, Mar 9, 2018 | Published: 03:59 GMT, Mar 9, 2018 |
0 Comments
1105
This post was written by : Vithushagan

இந்திய கிரிக்கெட் வீரர் மெஹமட் ஷமி மற்றும் குடும்பத்தினர் மீது அவரது மனைவி ஹசின் ஜகான் கொல்காத்தா பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மெஹமட் ஷமியின் மனைவியான ஹசின் ஜகான் அளித்த பேட்டியில், ஷமியும், அவரது தாய், சகோதரன் ஆகியோரும் தன்னை துன்புறுத்தி வருவதாகவும், கணவரின் குடும்பத்தார், தன்னை கொலை செய்ய கூட முயற்சித்ததாகவும் கூறியிருந்தார்.

இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஹசின் ஜகான் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஷமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஹசின் ஜகான் நேற்று மாலை செய்தியாளர்களிடையே பேசுகையில், ”எனது கடைசி மூச்சு இருக்கும் வரை அவரை விவாகரத்து செய்ய மாட்டேன். என்னிடன் எல்லா ஆதாரங்களும் உள்ளன. அவரை கோர்ட்டுக்கு இழுப்பேன்” என கூறினார்.

இந்நிலையில், கொல்காத்தாவில் உள்ள லால்பசார் பொலிஸ் நிலையத்தில் ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஹசின் ஜகான் புகார் அளித்துள்ளார். ஷமி மீதான புகார்களின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலில் அவரை சேர்க்காமல் நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg