Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐயாக்கண்ணுவைத் தாக்கியதால் பரபரப்பு!

In இந்தியா
Updated: 16:28 GMT, Mar 9, 2018 | Published: 04:44 GMT, Mar 9, 2018 |
0 Comments
1212
This post was written by : Litharsan

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட துண்டுப்பிரசுர பிரசாரத்தின்போது ஏற்பட்ட கலகலப்பில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் ஐயாக்கண்ணு தாக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இடத்தில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டாமென பா.ஜ.க.வின் பெண் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தபோது  ஐயாக்கண்ணு அப்பெண்ணை    தகாத வார்த்தையால் திட்டினார். இதனால் கோபமடைந்த பா.ஜ.க. பெண் உறுப்பினர் ஐய்யாக்கண்ணுவின் கன்னத்தில் அடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மற்றும் மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலம் விவசாயம் செய்வதை தடைசெய்யக்கோரியும் ஐயாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இணைந்து பிரசாசாரப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற பிரசார பயணத்தின் போதே அவர் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg