Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வன்முறை: ஆதாரங்களைத் திரட்டுவதாக மியன்மார் அறிவிப்பு

In உலகம்
Updated: 05:09 GMT, Mar 9, 2018 | Published: 05:09 GMT, Mar 9, 2018 |
0 Comments
1140
This post was written by : Suganthini

ராக்கின் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு மற்றும் படுகொலைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மியன்மார் அரசாங்கம் தெளிவான ஆதாரங்களைக் கோருவதாக, மியன்மாரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரங் ருன் (Thaung Tun) தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், ராக்கின் மாநிலத்தில் நிலவிய வன்முறை காரணமாக இடம்பெயர்ந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டுமென்று மியன்மார் அரசாங்கம் விரும்புவதுடன், இந்த மக்கள் தமது இடங்களுக்குத் திரும்பும் பட்சத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதத்தை தாம் வழங்கவுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

ராக்கின் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக, ஐ.நா.சபையின் மனித உரிமை விகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் செய்ட் அல் ஹுஸைன் நேற்றுமுன்தினம் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்தே, மியன்மார் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் மேற்படி கருத்து வெளிவந்துள்ளது.

ராக்கின் மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத இறுதியில் ஆரம்பித்த வன்முறை காரணமாக, ரோஹிங்கியா முஸ்லிம்கள் சுமார் 7 லட்சம் பேர், அயல் நாடான பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg