Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒலிம்பிக் சம்பியன் நிக்கோலா ஆடம்ஸின் உருவில் பார்பி பொம்மை

In விளையாட்டு
Updated: 05:32 GMT, Mar 9, 2018 | Published: 05:32 GMT, Mar 9, 2018 |
0 Comments
1138
This post was written by : Elakkiya

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் குத்துச்சண்டை பார்பி பொம்மை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் இரண்டு முறை சம்பியன் பட்டம் வென்ற பிரித்தானிய வீராங்கனை நிக்கோலா ஆடம்ஸின் உருவ அமைப்பில் இந்த பார்பி வடிவமைக்கப்பட்டுள்ளமையே சிறப்பம்சமாக உள்ளது.

அதுமட்டுல்ல முதலாவது குத்துச்சண்டை பார்பியும் இதுவாகும். இந்த பார்பி பொம்மை இளம் சந்ததியினருக்கு முன்மாதிரியாக அமையும் என்று வடிவமைப்பாளரான மட்டெல் நிறுவனம் தெரிவிக்கின்றது.

தீமைகளை வெளிப்படுத்தும் வகையிலான பொம்மைகளை உருவாக்கினர் என முன்னர் பெரிதும் விமர்சிக்கப்பட்ட மட்டெல், இந்த குத்துச்சண்டை பார்பி, பெண்களுக்கு பெருமை சேர்க்கும் என்பதுடன் அவர்களை ஊக்குவிக்கும் என்றும் கூறுகின்றது.

1982 இல் பிறந்த நிக்கோலா ஆடம்ஸ் கடந்த 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை பிரிவில் சம்பியன் பட்டம் வென்றிருந்தார். ஒலிம்பிக்கில் குத்துச்சண்டடை பிரிவில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையும் இவரையே சாரும்.

இதுமட்டுமல்ல சாதனைப் பெண்கள் பலரின் உருவங்களை ஒத்த பல பார்பி பொம்மைகளையும் மட்டேல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் வரலாற்றில் இடம்பிடித்த சாதனைப் பெண்கள் 17 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் உருவங்களை ஒத்ததாக இந்த பார்பி பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஃபென்சிங் சம்பியன் இப்திஹஜ் மொஹமட், ஜிம்னாஸ்ரின் சம்பியன் கபி டக்ளஸ், மொல் அழகி ஆஷ்லி கிரஹாம், வானூர்த்தி முன்னோடியான அமெலியா, திரைப்பட தயாரிப்பாளர் பட்டி ஜென்கின்ஸ், உலக புகழ் பெற்ற சமையல் நிபுணர் ஹெலென் டரோஸ், நாசா கணித மேதை கத்தரின் ஜான்சன், கரப்பந்து சம்பியன் ஹூய் ரோகோகி உள்ளிட்ட 17 பேரின் உருவங்களில் இந்த பார்பி பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg