Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனேடிய பணத்தாளில் கறுப்பினத்தவர்களுக்காக போராடிய பெண்ணின் உருவப்படம்!

In கனடா
Updated: 07:14 GMT, Mar 9, 2018 | Published: 07:12 GMT, Mar 9, 2018 |
0 Comments
1080
This post was written by : Anojkiyan

புதிய கனேடிய 10 டொலர் பணத்தாளில் நோவ ஸ்கோசியாவில், கறுப்பு இன மக்களிற்காக போராடிய வீரப்பெண் மறைந்த வயலா டெஸ்மொன்ட்டின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது.

ஹலிவக்ஸ் மத்திய நூலகத்தில் வெளியிடப்பட்ட இப்பணத்தாளை, நிதி அமைச்சர் பில் மொர்னெயு மற்றும் கனடா வங்கியின் ஆளுனர் ஸ்டீபன் போலோஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

இந்நிகழ்வின் போது, வயலா டெஸ்மொன்ட்டின் சகோதரி வான்டா றொப்சனிற்கு கௌரவம் வழங்கப்பட்டது.

எனினும், குறித்த பணத்தாள் நடப்பு ஆண்டின் பிற்கால பகுதியிலேயே நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் புழக்கத்தில் இருக்கும் பணத்தாள் ஒன்றில் முதன் முதலாக கறுப்பு இனம் மற்றும் அரச குடும்பம் சாராத பெண் தோன்றும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இதுதவிர இவரை கௌரவப்படுத்தும் முகமாக இவரது பெயர் ஹலிவக்ஸ் துறைமுக படகு, தபால் முத்திரை, மொன்றியல் வீதிகள் மற்றும் ஹலிவக்ஸ் மற்றும் ரொறொன்ரோவில் உள்ள பூங்காக்கள் போன்றவற்றிற்கும் சூட்டப்பட்டுள்ளது.

கடந்த 1946ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் திகதி 32 வயதை எட்டியிருந்த டெஸ்மொன்ட், சினிமா திரையரங்கில் வெள்ளையர் பிரிவில் அதாவது மேல் மாடியில் அமர்ந்த குற்றத்திற்காக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

சிவில் உரிமை ஆர்வலரான இவர் ஒரு சதத்திற்காக ஏமாற்றினார் என குற்றம் சாட்டப்பட்டது. மேல் மாடிக்கும் கீழ் மாடிக்குமான வரி வித்தியாசம் ஒரு சதமாகும்.

இதையடுத்து அவர், 20 டொலர்கள் அபராதம் மற்றும் 6 டொலர்கள் நீதிமன்ற செலவு ஆகிய தொகையை செலுத்திய பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இதன்பின்னர் அவர் அனைவரினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் கறுப்பு இன மக்களிற்காக போராடத்தொடங்கினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg