Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்யா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை – தெரேசா

In
Updated: 08:43 GMT, Mar 9, 2018 | Published: 08:43 GMT, Mar 9, 2018 |
0 Comments
1204
This post was written by : Suganthini

இங்கிலாந்திலுள்ள ரஷ்யாவின் முன்னாள் உளவாளியும் அவரது மகளும் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டமை தொடர்பாக, ரஷ்யாவின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கப்படுமென, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

ஐ.ரி.வி. தொலைக்காட்சிச் சேவைக்கு நேற்று (வியாழக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ரஷ்யாவின் முன்னாள் உளவாளியும் அவரது மகளும் மயக்க நிலையில் மீட்கப்பட்டமை தொடர்பாக, ரஷ்யாவின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ரஷ்யாவுக்கு உரிய பதிலடியை நாம் வழங்குவோம்’ என்றார்.

‘இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய பொலிஸாருக்கு போதியளவான காலஅவகாசம் தேவை. இந்நிலையில், ரஷ்யாவின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்பதுடன், சரியானதை நாம் செய்வோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான 66 வயதுடைய செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது 33 வயதுடைய மகளான யூலியாவும், பல்பொருள் அங்காடியொன்றில்; மயக்கமடைந்த நிலையில் கடந்தவாரம் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானியப் பிரதமரின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணையைப் பொலிஸார் மேற்கொண்ட நிலையில், இவர்களுக்கு நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg