Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக சமுகத்தின் கண்டன அறிக்கை

In
Updated: 09:47 GMT, Mar 9, 2018 | Published: 09:46 GMT, Mar 9, 2018 |
0 Comments
1081
This post was written by : poovannan

முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையினை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தென்கிழக்கு பல்கலைக்கழக சமுகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முஸ்லீம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வன்முறைகள் தொடர்பாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில், “மூவின சமுகங்களின் நல்லுறவை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடாக இடம்பெற்ற வன்முறைகளைக் கண்டிக்கின்றோம். இவ்வன்முறையின் மூலம், முஸ்லிம்களை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமடையச் செய்ய முடியும் எனத் தாக்குலுக்குக் காரணமான குழுக்கள் நம்புகின்றனர்.

இனவாத அடிப்படையில் செயற்படுகின்ற குழுக்கள், முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவது கவனிக்கத்தக்கது. முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள், கலாசார அடையாளங்கள், வியாபாரத் தலங்கள் போன்றன இக்குழுக்களின் பிரதான இலக்காக உள்ளன.

முஸ்லிம்களுக்கு எதிரான கலகங்களுக்கும் வன்முறைகளுக்குமான நியாயங்களாக முன்வைக்கப்படும் கருத்துக்களை, அரசியல் ரீதியான உந்துதல்களுடன் இளைஞர்களை ஒன்றுதிரட்டுவதற்கான முயற்சியின் ஓர் அங்கமாகவே பார்க்க வேண்டியுள்ளது.

சிங்கள – முஸ்லிம் முரண்பாடுகளின் பின்புலமாக அமைந்துள்ள உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு, மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள், சிவில் சமூக அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், நாடுகடந்த அமைப்புக்கள் மற்றும் சர்வதேச சமூகம் உள்ளிட்ட பலரும் முன்னெடுக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg