Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுங்கவரித்திட்டம்: ஐரோப்பிய ஒன்றியம் பதிலளிக்க வலியுறுத்து

In ஐரோப்பா
Updated: 12:12 GMT, Mar 9, 2018 | Published: 10:21 GMT, Mar 9, 2018 |
0 Comments
1072
This post was written by : Suganthini

உருக்கு மற்றும் அலுமினியம் மீது சுங்கவரியை அமுல்படுத்தும் திட்டத்துக்கு, ஐரோப்பிய ஒன்றியம் உரிய பதிலளிக்க வேண்டுமென, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன் வ்வைஸ் லீ டிரையன் (Jean-Yves Le Drian) தெரிவித்துள்ளார்.

பரிஸில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதியில், சுங்கவரியை அமுல்படுத்தும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ளார். இந்நிலையில், சுங்கவரி தொடர்பான திட்டத்துக்கு, ஐரோப்பிய ஒன்றியம் உறுதியான பதில் வழங்க வேண்டும்’ என்றார்.

மேலும், வர்த்தகத் தடைகள், நீண்டகாலத்தில் அமெரிக்காவின் நலன்களைப் பாதிக்குமெனவும், அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg