Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை குறித்த சர்வதேசத்தின் எதிர்பார்ப்பு என்ன? கூட்டமைப்பினரிடம் வெளிப்படுத்தினார் ஐநா உயர் அதிகாரி

In இலங்கை
Updated: 14:15 GMT, Mar 9, 2018 | Published: 14:15 GMT, Mar 9, 2018 |
0 Comments
1251
This post was written by : Arun Arokianathan
https://youtu.be/LE8_oEXAtQo
இந்த அரசாங்கம் எந்த மக்கள் ஆணையின் மீது ஆட்சியில் அமர்ந்தப்பட்டதோ அது முழுமையாக நிறைவேற்றப்பட்டவேண்டும்  என்பதே ஐக்கிய நாடுகள் சபையினதும் பொதுவாக சர்வதேச சமூகத்தினரதும் எதிர்பார்ப்பாகும் .இந்த விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இன்று கொழும்பில் நடத்திய சந்திப்பின் போது என ஐநாவின் அரசியல் விவகாரங்களுக்கான  ஜெவ்ரி பெல்ட்மன்  குறிப்பிட்டதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். 
 
இன்றைய  சந்திப்பின்போது  எதிர்க்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான  தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோரும் பங்கேற்றனர்.
 
இன்றைய சந்திப்புத் தொடர்பாக த மிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துவெளியிடுகையில்,
 
“இலங்கைக்கான அவரது ஐந்தாவது வருகை இதுவாகும் இந்த முக்கியமான தருணத்திலே அவர் வந்திருப்பதை நாங்கள் வரவேற்றிருக்கின்றோம். அவர் ஜனாதிபதியைச் சந்தித்ததாக சொன்னார். எங்களோடு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலே இப்போது இருக்கின்ற
ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையை விளக்கிச் சொல்லியுள்ளோம். கூட்டரசாங்கம் குறித்த ஆணையின் பிரகாரம் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அந்த ஆணையை முழுமையாக நிறைவேற்ற வேண்டியது அவர்களது கடமை என்பதை நாம் வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றோம். ஒரு உள்ளூராட்சித் தேர்தலிலே ஏற்பட்ட பின்னடைவு காரணமாக மக்களுக்கு கொடுத்த ஆணையை அவர்களுக்கு கொடுத்த ஆணையை உதாசீனம் செய்து கைவிடமுடியாது என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கின்றோம். அவரும் தான் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையிலே இதே விடயங்களை வலியுறுத்தி சொல்லியிருப்பதாக கூறினார்.
சர்வதேச சமூகம் இலங்கையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மிகவும் காலதாமதமானமாக ஏற்பட்டதாகவும் இப்போது முன்னேற்றம் குறைந்திருக்கின்றதென்பதையும் அவதானித்திருக்கின்றதென சொன்னார்.தற்போது நடந்துகொண்டிருக்கின்ற ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரிலே விசேடமாக உயர் ஸ்தானிகரின் அறிக்கையிலே இது பிரதிபலிக்கப்படும் என்று சொன்னார். சர்வதேசத்தின் கவனம் வெகுவாக இலங்கை பால் ஈர்க்கப்பட்டிருக்கின்றதென்றும் இந்த அரசாங்கம் எந்த மக்கள் ஆணையின் மீது ஆட்சியில் அமர்ந்தப்பட்டதோ அது முழுமையாக நிறைவேற்றப்பட்டவேண்டும் என்பது தான் ஐக்கிய நாடுகள் சபையினதும் பொதுவாக சர்வதேச சமூகத்தினரதும் எதிர்பார்ப்பாகும் என்பதையும் சொல்லியிருக்கின்றார். இங்கே தான் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகள் பற்றி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரோடும் கலந்துரையாடுவேன் அவருக்கும் அதைப் பற்றி சொல்லுவேன் என்று வாக்களித்திருக்கின்றார்.
ஐக்கிய நாடுகள் சபையினுடைய விசேடமாக பொதுச் செயலாளருடைய ஆதரவு இலங்கையிலே ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சி வெற்றிபெறவேண்டும் என்பதற்கு தொடர்ச்சியாக இருக்கும் என்பதும் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைத் தீர்மானம் முற்றுமுழுதாக செயல் வடிவம் பெறவேண்டும் என்பதிலும் தங்களுடைய ஆதவும் இருக்கும் என்பதையும் வலியுறுத்தினார்.” என நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg