Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல் பிரவேசத்தின் பின்னர் முதல் முறையாக ரஜினிகாந்த் இமயமலை பயணம்!

In இந்தியா
Updated: 04:08 GMT, Mar 10, 2018 | Published: 04:08 GMT, Mar 10, 2018 |
0 Comments
1126
This post was written by : Risha

சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை தொடர்ந்து முதல் முறையாக இன்று (சனிக்கிழமை) இமய மலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

அங்கு இரண்டு வாரங்கள் தங்கியிருக்கவுள்ள ரஜினிகாந்த், சென்னை திரும்பியதும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் தனது கட்சியின் பெயரையும், கொடியையும் ஏப்ரல் புத்தாண்டில் வெளியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இமயமலை பயணத்தை நிறைவுசெய்து திரும்பியதும் ரஜினிகாந்த் தனது கட்சி பெயரை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ”இமயமலைக்கு சென்று 8 ஆண்டுகளாகின்ற நிலையில், அரசியல் இயக்கம் ஆரம்பிக்க தீர்மானித்த பின்னர் முதல் முறையாக இமயமலைக்கு செல்லவுள்ளேன்.

புதிதாக எந்த வேண்டுதலும் இல்லை. குறைந்தபட்சம் 10 நாள் முதல் 15 நாட்கள் அங்கு தங்க திட்டமிட்டுள்ளேன். தர்மசாலா, பாபா குகைக்கும் சென்று வழிபட உள்ளேன். இமயமலை சென்ற பின்னர்தான் எத்தனை நாட்கள் அங்கு தங்கியிருப்பது என்பது முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காவிரி மேலாண்மை சபை குறித்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தற்போது அது குறித்து பதிலளிக்க விரும்பவில்லை எனக் கூறிச் சென்றுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg