Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒற்றைச்சந்தையுடன் பலமான உறவைப் பேண விரும்புகிறோம் -ஜெர்மி

In
Updated: 06:50 GMT, Mar 10, 2018 | Published: 06:50 GMT, Mar 10, 2018 |
0 Comments
1130
This post was written by : Suganthini

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச்சந்தையுடன் புதியதும்  பலமானதுமான உறவைப் பேண தாம் விரும்புவதாக, பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெர்மி கோர்பின் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தொழிற்கட்சியின் மாநாட்டில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இம்மாநாட்டில் ஒற்றைச்சந்தையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உரையாற்றிய அவர், ‘ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச்சந்தை மற்றும் சுங்கத் திணைக்களத்தின் நன்மைகளை நாம் தக்கவைக்க வேண்டும். இந்நிலையில், ஒற்றைச்சந்தையுடன் புதியதும் பலமானதுமான உறவைப் பேண நாம் விரும்புகின்றோம்’ என்றார்.

மேலும், பிரெக்சிற் திட்டம் தொடர்பாக கொன்சர்வேட்டிவ் கட்சியின் திட்டங்கள் குழப்பம் நிறைந்ததாகக் காணப்படுவதாகக் கூறிய அவர், பிரெக்சிற்றுக்கு பொதுவான உணர்வு மற்றும் அணுகுமுறை உள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னர், பிரித்தானிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மக்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கவும், தமது கட்சி நடவடிக்கை எடுக்குமெனவும், அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg