Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோத துப்பாக்கி வெடித்து இளைஞன் உயிரிழப்பு!

In இலங்கை
Updated: 07:14 GMT, Mar 10, 2018 | Published: 07:14 GMT, Mar 10, 2018 |
0 Comments
1088
This post was written by : Ravivarman

வவுனியாவில் சட்டவிரோதமாக வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் துப்பாக்கி வெடித்ததில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) நெடுங்கேணி, ஊஞ்சல்கட்டி கிராமத்தில் இடம்பெற்றுள்ளதுடன், இராசபுரம் ஊஞ்சல் கட்டியை சேர்ந்த இருபத்து மூன்று வயதுடைய சிதம்பரம் விஜயன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, ‘காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக உள்ளூரில் பயன்படுத்தப்படும் சட்டவிரோத துப்பாக்கியினை (கட்டுத்துவக்கு) மதகினுள் மறைத்து வைத்துள்ளனர்.

சம்பவதினம் இவ்வாறு மறைத்து வைக்கப்பட்ட உள்ளூர்த் துப்பாக்கியை வேட்டைக்கு செல்வதற்காக எடுத்தபோது துப்பாக்கி தன்னிச்சையாக வெடித்ததில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg