Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிங்கள மக்களின் அச்சத்திற்கு சிறுபான்மையினரா பலிக்கடா?

In இன்றைய பார்வை
Updated: 08:20 GMT, Mar 10, 2018 | Published: 08:19 GMT, Mar 10, 2018 |
0 Comments
1442
This post was written by : Arun Arokianathan

சிங்கள மக்களின் மனங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேவையற்ற அச்சமே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமாகியிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க நேற்று  பாராளுமன்றத்தில்  குற்றஞ்சாட்டினார்.

“தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள இனவாத சூழலில், நாடு பிளவுபடப்போகிறது, விடுதலைப் புலிகள் மீண்டும் மீட்சிபெறப் போகின்றனர், சிங்கள இனம் குறைந்து செல்கிறது, பௌத்த மதஸ்தலங்கள் நாசமாக்கப்படுகின்றன போன்ற உளரீதியான அச்சமொன்று சிங்கள மக்களின் மூளைகளுக்குள் செலுத்தப்பட்டுள்ளது. பொதுவாக சிங்கள இனவாதிகள் எனக் கூறுபவர்களுக்கும் அப்பால், சாதாரண சிங்கள மக்களின் மூளைகளிலும் நாடு முடிந்துவிட்டது என்ற அச்சம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. “என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விஞ்ஞானம் இன்று மனித குலத்திற்கு மகத்தான நன்மைகளை வழங்கிவருகின்ற காலத்தில் கற்கால மனிதர்கள் போன்ற சிந்தனைகளுடன் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுவதற்காக சிறுபான்மையினர் பலிக்கடா ஆகவேண்டுமா? என்ற கேள்வி வலுவாக எழுகின்றது.

இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகத் திகழும்  சமூ­கங்­க­ளை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் நல்­லெண்ணம் கொண்ட சகல மக்­களும் சக­வாழ்­வுடன் நிம்­ம­தி­யாக வாழ வேண்­டு­மென்றே விரும்­பு­கின்­றனர். ஆனால், இன­வா­த­மும் மத­வா­தமும் இம்­மக்­களின் சமா­தான, சக­வாழ்­வுக்குத் தொடர்ச்­சி­யாக சவால் விடுத்­துக்­கொண்­டி­ருப்­பதை வர­லாற்று நெடுகிலும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

அண்­மைக்­கா­ல­மாக சிறு­பான்மை சமூ­க­மான முஸ்­லிம்­களை நெருக்­க­டிக்குள் தள்­ளு­வதை இலக்­காகக் கொண்டு செயற்­படும் கடும்­போக்­கா­ளர்கள் முஸ்­லிம்­களின் மத, கலை, கலா­சார, பண்­பாட்டு நட­வ­டிக்­கைகள் உட்­பட பல்­வேறு விட­யங்­களில் போலி­யான குற்­றச்­சாட்­டுக்­களை தாக்­கு­தல்­களை மேற்­கொ­ணடு வரு­வதைக் காணலாம்.

இந்­நாடு சுதந்­தி­ர­ம­டை­வ­தற்கு முன்­னரும், பின்­ன­ரு­மான காலங்­களில் பெரும்­பான்மை பௌத்த சிங்­கள மக்கள் மத்­தி­யி­லுள்ள கடும்­போக்­கா­ளர்கள் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக மேற்­கொண்ட இன­வாதச் செயற்­பா­டுகள் தீராத இனப்­பி­ரச்­சி­னை­யையும், முப்­பது வருட கால கொடூர யுத்­தத்­தையும், பேர­ழி­வு­க­ளையும் விளை­வு­க­ளாக கொடுத்­தது.

அதன் வடுக்­களும், வேத­னை­களும், மறை­யாத, மற­வாத நிலையில், அவற்றின் அழி­வு­க­ளுக்கும், இழப்­புக்­க­ளுக்கும் முற்­று­மு­ழு­தாக நிவா­ரணம் வழங்­கப்­ப­டாத சூழலில், பாதிக்­கப்­பட்ட மக்கள் பாதிப்­புக்­க­ளுக்கு நிவா­ர­ணமும் நிரந்­தரத் தீர்வும் வேண்டி வடக்­கிலும், கிழக்­கிலும், தெற்­கிலும் கூட பல்­வேறு கோணங்­களில் போராட்­டங்­களை நடத்தி வரு­வ­துடன், அவற்­றி­னூ­டாக பல வேண்­டு­கோள்­க­ளையும், கோரிக்­கை­க­ளையும் முன்­வைத்து சர்­வ­தே­சத்­தி­னதும், அர­சி­னதும் கவ­னத்தை ஈர்க்கச் செய்து வரு­கின்­றனர்.

சர்­வ­தே­சத்தின் இறுக்­க­மான பிடிக்குள் இலங்கை தள்­ளப்­ப­டு­வ­தற்கு இன­வாதத்தின் பரம்பல் ஏற்­ப­டுத்திய காயங்­கள்தான் என்­பதை மறுக்க முடி­யாது. சர்­வ­தேசம் பல்­வேறு பிரே­ர­ணை­களை முன்­வைத்து அவற்றை நிறை­வேற்­றுங்கள் இல்­லைேயல் சர்­வ­தேச நியா­யா­திக்­கத்தை நோக்கி நகர வேண்டி வரும் என இலங்­கைக்கு எச்­ச­ரிக்கை விடும் அள­வுக்கு மோச­மான நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­ய­வர்கள் பௌத்த சிங்­கள மக்கள் மத்­தி­யி­லுள்ள கடும்­போக்கு மத­வா­தி­களும் இன­வா­தி­களும் என்­பதை மறு­த­லிக்க இய­லாது.

இச்­சு­தந்­தி­ரத்­தே­சத்தில் வாழும் அனைத்து இன மக்­களும் சுதந்­தி­ர­மாக வாழ முடியும் என்றும், அவர்­க­ளுக்­கான உரி­மைகள் மறுக்­கப்­ப­டு­த­லா­காது என்றும் உரிமைச் சாச­னங்­களும், நிபந்­த­னை­களும், நிய­தி­களும் சர்­வ­தேச ரீதி­யா­கவும், தேசிய ரீதி­யா­கவும் வகுக்­கப்­பட்­டி­ருந்­தும் இந்­நாட்டின் பெரும்­பான்மை சமூ­க­மான பௌத்த சிங்­கள மக்கள் மத்­தி­யி­லுள்ள கடும்­போக்கு மத­வா­தி­களும், இன­வா­தி­களும் மத­வா­தத்­திற்கும், இன­வாதத்­திற்கும் முன்­னு­ரிமை வழங்கி சர்­வ­தேச யாப்­புக்­க­ளையும், தேசிய அர­சியல் சாச­னங்­க­ளையும் அச்­சா­ச­னங்­க­ளினால் உரு­வாக்­க­ப்பட்­டுள்ள சட்­டங்­க­ளையும் சவால்­க­ளுக்கு உட்­ப­டுத்திஇ அச்­சட்­டங்­களை ஒதுக்கி வைத்­து­விட்டு, அவற்றை ஒரு பொருட்­டாக எடுத்­துக்­கொள்­ளாது பெரும்­பான்­மை­யினர் என்ற ம­மதையில் சிறு­பான்மை சமூ­கத்­திற்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தா­னது சமூ­கங்­களின் சக­வாழ்­வுக்கு மாத்­தி­ர­மல்ல இந்­நாட்டின் சட்­டத்­திற்கும், நிர்­வாகச் செயற்­பா­டு­க­ளுக்கும் எதிர்­கால அபி­வி­ருத்­திக்கும் பெரும் அச்­சு­றுத்­த­லாக அமைந்து விடு­வ­தோடு இந்­நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளுக்குத் தடை­யா­கவும் சவா­லா­க­வு­முள்­ள­துடன் இலங்­கையை சர்­வ­தே­சத்­திடமும் இறுக்­கி­யுள்­ளது

குறிப்­பாக கடந்த 2012ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை முஸ்­லிம்­களை முதன்­மைப்­ப­டுத்தி மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற தாக்­குதல் சம்­ப­வங்கள் முஸ்­லிம்கள் வாழப் பாது­காப்பு அற்ற நாடுகள் வரி­சையில் இலங்­கை­யையும் உட்­ப­டுத்­து­வ­தற்கு கார­ண­மா­யிற்று. இன­வா­தி­களின் நட­வ­டிக்­கைகள் சர்­வ­தேச நிறு­வ­னங்கள் இலங்கை குறித்து அறிக்­கை­வி­டு­வ­தற்கும்இ சர்­வ­தே­சத்தின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கச் செய்­வ­தற்கும் உந்­து­சக்­தி­யாக அமைந்­து­விட்­டன.

இலங்­கை­யா­னது, சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்டம் மற்றும் சர்­வ­தேச மனித உரிமைச் சட்­டங்கள் மீறப்­பட்­ட­தாகக் கூறப்­படும் விட­யத்தில் நம்­ப­க­ர­மான பொறுப்புக் கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்­கா­விடின் இந்த விவ­காரம் சர்­வ­தேச நியா­யா­திக்­கத்தை நோக்கி பய­ணிக்­கும் என்ற ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் எச்­ச­ரிக்­கைக்கு முகம்­கொ­டுத்­துள்ள நிலையில், இந்­நாட்டின் மீது சர்­வ­தேசம் வைத்­துள்ள கறுப்­புப்­புள்­ளியை நீக்­கு­வ­தற்­காக இவ்­வ­ரசு முயற்­சித்து வரும் வேளையில், பௌத்த சிங்கள கடும்­போக்­கா­ளர்கள் மேற்­கொண்டு வரு­கின்ற நட­வ­டிக்­கைகள் எவ்­வி­தத்­திலும் இக்­க­றுப்­புப்­புள்­ளியை அகற்ற வழி­கோ­லாத நிலையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

நாட்டின் மீது­பற்­றுள்­ள­வர்கள் இந்­நாடு பல்­து­றை­யிலும் முன்­னேற வேண்டும்இ சர்­வ­தே­சத்தில் நற்­பெ­யரைப் பெற வேண்­டு­மென்றே சிந்­திப்பர். ஆனால்இ இங்­குள்ள பௌத்த சிங்­கள பேரி­ன­வாத சக்­திகள் நாட்டின் மீது பற்­றுள்­ள­வர்­க­ளாக சிங்­கள மக்கள் மத்­தியில் அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்டு, சர்­வ­தே­சத்தின் பிடிக்குள் தள்­ளப்­பட்­டுள்ள இலங்­கையின் நிலைமை குறித்து எவ்­வித அக்­க­றையும் கொள்­ளாது, தங்­களை இயக்­கு­கின்ற சக்­தி­களின் இலக்­கு­களை வெற்­றி­கொள்ளச் செய்­வ­தற்­காகச் செயற்­பட்டுக்கொண்­டி­ருப்­பதைக் காண முடி­கி­றது.

கடந்த வருடம் கொழும்பில் தங்­கி­யி­ருந்த ரோஹிங்­கியா முஸ்லிம் அக­திகள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்குதல் மற்றும் சென்ற நவம்பர் மாதம் கிந்­தோட்­டையில் முஸ்­லிம்கள் மீது கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட வன்­மு­றைகள் என்­ப­வற்றை கார­ணங்­க­ளாகக் குறிப்­பிட்டு கடந்த 22ஆம் திகதி சர்­வ­தேச மன்­னிப்புச் சபை­யினால் வெளியி­டப்­பட்­டுள்ள உலக நாடு­களின் மனித உரி­மைகள் நிலை­வரம் தொடர்பில் 2017 மற்றும் 2018ஆம் ஆண்­டு­க­ளுக்­கான அறிக்­கையில் முஸ்­லிம்கள் வாழ்­வ­தற்கு பாது­காப்­பற்ற நாடாக இலங்­கையை பட்­டி­ய­லி­ட்­டி­ருப்­ப­தா­னது இலங்கை மீது சர்­வ­தேசம் வைத்­துள்ள கறுப்புப் புள்­ளி­யா­கவே கரு­த­வேண்­டி­யுள்­ளது.

அத்­தோடு, கடந்த ஜன­வரி மாதம் சர்­வ­தேச மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் வெளியிட்ட அறிக்­கையில், இலங்­கையில் வாழும் சிறு­பான்­மை­யினர் பாது­காப்­பின்­மையை உணர்­கின்­றனர். குறிப்­பாக இலங்கை முஸ்­லிம்கள் அச்­சத்தில் உள்­ளனர் என அந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இதேபோல் கடந்த வருடம் யாழ்ப்­பாண முஸ்லிம் அமைப்­பினர் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் சிறு­பான்மை விவ­கா­ரங்­க­ளுக்­கான பிர­தி­நிதி றீட்டா ஐசக்கை சந்­தித்­த­வேளை, இலங்கை முஸ்­லிம்­களின் நிலை­கண்டு நான் அதிர்ச்­சி­ய­டைந்தேன் எனக் குறிப்­பிட்­டி­ருந்­தார். இவ்­வாறு சர்­வ­தேசம் கவலை கொள்ளும் அள­வுக்கு பௌத்த சிங்கள பேரி­ன­வாதத்தால் இலங்கை வாழ் முஸ்­லிம்கள் துவம்சம் செய்­யப்­பட்டுக்கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பது புலப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. அத்­துடன், இலங்கை மீது வைக்­கப்­பட்­டுள்ள கறுப்­புப்­புள்­ளியை அகற்­று­வ­தற்குத் தடை­யா­க­வுள்­ளது என்­பதைச் சுட்­டிக்­காட்ட வேண்டும். சிறு­பான்மை சமூ­கங்­களை உணர்வு ரீதி­யா­க­வும் செயற்­பாட்டு வடி­விலும் அச்­சு­றுத்­து­வ­தற்­காக வெவ்­வேறு பெயர்­களில் பௌத்த சிங்­கள மக்கள் மத்­தியில் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்கும் அமைப்­புக்­களும் அவர்­க­ளோடு இணைந்து செயற்­படும் கடும்­போக்­கா­ளர்­களும்இ இன­வா­திகளும் வெவ்­வேறு போலிக்கார­ணங்­களைக் கூறி முஸ்­லிம்கள் மீது மேற்­கொண்டு வரு­கின்ற தாக்­குதல் சம்­ப­வங்­களின் வரி­சையில் அம்­பாறை, திகண ,தெல்தெனிய ,அகுரண உட்பட பல பகுதிகளில்  முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான 25ற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள், கடை­கள், வாகனங்கள்  மீது தாக்குதல் நடத்தப்பட்டு பாரிய அழிவுகள் விளைவிக்கப்பட்டிருக்கின்றமையானது   சர்­வ­தே­சத்தின் இலங்கை மீதான பார்­வையை மேலும் வலுப்­ப­டுத்­து­மென அர­சியல் ஆய்­வா­ளர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.   முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள தாக்­கு­தல்கள் தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் ஆணைக்­குழு உட­ன­டி­யாக அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சர்வதேசத்தின் கண்காணிப்பும் செயற்பாடும் இலங்கைக்குள் எத்ததைய காத்திரமான மாற்றத்தைக் கொண்டுவரும் என்பது கேள்விக்குரியது.

2000ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் நாட்டை ஒரு நிலைக்குக் கொண்டுவருவதற்கு மக்கள் மூன்று சந்தர்ப்பங்களை வழங்கியிருந்தனர். முதலாவது சந்தர்ப்பம் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பின்னரான நிலைமையாகும்.

இதனால் நாட்டுக்கு பாரிய அழிவு ஏற்பட்டிருந்தாலும் நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கு சகலரும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு வழி ஏற்படுத்தியிருந்தனர். அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தது. எனினும், தனது அதிகார மோகத்தினால் அதனை தவறவிட்டிருந்தார்.

2015ஆம் ஆண்டு மற்றுமொரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. மக்களால் வழங்கப்பட்ட ஆணையும் இந்த ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்படவில்லை. எமது நாட்டு மக்கள் 13 வருடங்களில் நாட்டை தேசிய ரீதியில் ஓரிடத்துக்குக் கொண்டுவந்து முன்னேற்றிச் செல்லுவதற்கான சந்தர்ப்பத்தை மூன்று தடவைகள் வழங்கியிருந்தார்கள். ஆனால் எத்தனை சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டாலும் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல தம்மால் முடியாது என்பதை ஆட்சியாளர்கள் நிரூபித்துள்ளார்கள்.

இனவாதத்தையும், மதவாதத்தையும் கட்டுப்படுத்த தவறியமையே இந்த சந்தர்ப்பங்கள் நழுவிப்போக காரணமாகும் அப்படி இருக்கையில் சிறுபான்மையினர் மீதான அச்சமே வன்முறைகளுக்கு காரணம் எனக் கூறுவது வேடிக்கையானது. சட்டத்தின் ஆட்சி தராதரம் பாராது நிலைபெற்றால் இந்த நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை நோக்கிய ஆரம்பப்படியை எழுத்துவைக்க முடியும்.

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg