Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்ச்சைக்குரிய உலோகப் பொருட்களுக்கான புதிய வரிவிதிப்பிலிருந்து கனடாவுக்கு விலக்கு!

In கனடா
Updated: 10:21 GMT, Mar 10, 2018 | Published: 10:21 GMT, Mar 10, 2018 |
0 Comments
1056
This post was written by : Anojkiyan

சர்ச்சைக்குரிய உலோகப் பொருட்களுக்கான புதிய வரிவிதிப்பிலிருந்து கனடா மற்றும் மெக்சிக்கோவுக்கு இறுதி தருணத்தில் கால வரையறை இன்றி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உருக்குக்கு 25 சதவீதமும், அலுமினியத்திற்கு 10 சதவீதமும் வரிவிதிக்க வகை செய்யும் இந்த புதிய சட்டத்திற்கான ஆணையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஆணை இன்னமும் 15 நாட்களில் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறுகையில், “கனடாவுடனும் மெக்சிக்கோவுடனும் அமெரிக்காவுக்கு உள்ள தனித்துவம் வாய்ந்த உறவுநிலை காரணமாக, இந்த இரண்டு நாடுகளையும் இந்த புதிய வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ சம்பந்தப்பட்ட வட அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுக்களில் உரிய உடன்பாடுகள் எட்டப்படாவிட்டால், அல்லது அந்த உடன்பாடு இல்லாது செய்யப்பட்டால், இந்த விவகாரம் மீண்டும் பரிசீலிக்கப்படும். அல்லது வேறு வழிகளில் இது குறித்து சிந்திக்கப்படும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg