Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலீட்டாளர்களை ஏமாற்றி தொழிலதிபருக்கு ஏழாண்டு சிறை!

In வணிகம்
Updated: 11:18 GMT, Mar 10, 2018 | Published: 11:18 GMT, Mar 10, 2018 |
0 Comments
1053
This post was written by : Risha

அமெரிக்க தொழிலதிபரும், மருத்துவ நிறுவனமொன்றின் முன்னாள் நிர்வாகியுமான மார்டின் ஷ்க்ரிலிக்கு, ஏழாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களை ஏமாற்றிய குற்றச்சாட்டிலேயே அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களுக்கு போலி கணக்கு அறிக்கைகளை அனுப்பிய குற்றச்சாட்டில் ஷ்க்ரிலி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு விசாரணைகளின் அடிப்படையில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

உயிர்காக்கும் மருந்துகளின் விலையை உயர்த்தியமைக்காக இவர் மீது முதன்முதலாக கடந்த 2015ஆம் ஆண்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg