Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அட்டகாசமான அசைவ வடை..

In
Updated: 11:43 GMT, Mar 10, 2018 | Published: 11:43 GMT, Mar 10, 2018 |
0 Comments
1050
This post was written by : Puvanes

கோழி ஏராளமானோருக்கு பிடித்தமான உணவு. அதிலும் கோழி உண்ண பிடிக்கும் பலருக்கு அதில் கறி செய்வது, பொரிப்பது போன்ற உணவுகளை பிடிப்பதில்லை. அவ்வாறானவர்களும் கூட விரும்பி உண்ணும் உணவாக கோழி வடை அமையும்…

வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். கோழியை நன்றாக கழுவி தண்ணீர் நன்றாக வடிந்த பின்னர் வடை பதத்தில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த கோழியுடன், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், மிளகு தூள் மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்துக் கொண்டு வடையாக தட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து மஞ்சள் கருவை நீக்கி அதில் உள்ள வெள்ளை கருவை மட்டும் எடுத்துக்கொள்ளவும் மறுபக்கம் ஒரு தட்டில் பான் தூளை வைத்து கொள்ளவும்.

எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்த உருண்டைகளை முட்டையில் பிரட்டிய பின்பு அதை பான் தூளில் போட்டு பிரட்டி எடுத்து எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும். சுடச் சுட கோழி வடை தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg