Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமருக்கெதிராக தினேஷ் தலைமையில் திட்டமிடல் குழு!

In இலங்கை
Updated: 12:52 GMT, Mar 10, 2018 | Published: 12:52 GMT, Mar 10, 2018 |
0 Comments
1177
This post was written by : Anojkiyan

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற புதிய திட்டமிடல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொது எதிரணியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன தலைமையில் திட்டமிடல் குழுவொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

இதேவேளை, பிரதமருக்கெதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற ஆதரவு திரட்டுவதற்காக கூட்டு எதிர்கட்சியினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

கூட்டு எதிர்கட்சியினரால் கொண்டுவரப்படவுள்ள குறித்த பிரேரணையில் பிரதமருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடந்த மார்ச் 6ஆம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவிருந்த நிலையில், பின்னர் குறித்த பிரேரணை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg