Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இயேசு கடவுளுடைய ஒரே மகன்!

In
Updated: 12:54 GMT, Mar 10, 2018 | Published: 12:54 GMT, Mar 10, 2018 |
0 Comments
1113
This post was written by : Puvanes

எல்லாரும் இயேசுவோடு நன்றாக பழகியதற்கு காரணம் என்ன? பைபிள் இயேசுவை ஒரே மகன் எனவும் கூறுகின்றது.

பூமியில் பிறப்பதற்கு முன்பு இயேசு பரலோகத்தில் ஒரு சக்தியுள்ள நபராக, அதாவது தேவதூதராக இருந்தார். (யோவான் 8:23) யெகோவா முதல் முதலில் இயேசுவைத்தான் படைத்தார். மற்ற எல்லாவற்றையும் படைக்க அவரைப் பயன்படுத்தினார். இயேசுவை மட்டும்தான் யெகோவா நேரடியாக படைத்தார்.

அதனால்தான், அவரை கடவுளுடைய ‘ஒரே மகன்’ என்று பைபிள் சொல்கிறது. அதோடு, இயேசுவை “வார்த்தை” என்றும் பைபிள் சொல்கிறது. ஏனென்றால், கடவுள் என்ன சொன்னாரோ அதை இயேசு மற்றவர்களுக்கு சொன்னார்.

இப்படியான சர்வல்லமையும் படைத்த இயேசு ஏன் பூமிக்கு வந்தார்?

இயேசுவை பரலோகத்திலிருந்து பூமிக்கு கடவுளே அனுப்பினார். இயேசுவின் உயிரை மரியாள் என்ற கன்னிப் பெண்ணின் கருப்பைக்கு கடவுள் மாற்றினார்.

அதனால் ஒரு மனித அப்பாவினால் இயேசு பிறக்கவில்லை. (லூக்கா 1:30-35) அவர் பூமிக்கு வந்ததற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. கடவுளைப் பற்றி எல்லாருக்கும் சொல்லிக் கொடுப்பதற்காக வந்தார். என்ன கஷ்டம் வந்தாலும் கடவுளுக்கு பிடித்த மாதிரி எப்படி நடந்துகொள்ளலாம் என்பதை காட்டுவதற்காக வந்தார். ஜனங்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதற்காக அவருடைய உயிரையே “மீட்புவிலையாக” கொடுக்க வந்தார்.(மத்தேயு 20:28)

அப்படியானால் எதிலிருந்து மனிதர்களை… யாரிடம் இருந்து மனிதர்களை காப்பாற்ற வேண்டும்? மீட்கப்பட வேண்டும் என இயேசு அனுப்பப்படுகின்றார்…

மனிதர்கள் சாவிலிருந்து மீட்கப்பட வேண்டும், அதனால், மீட்புவிலை தேவைப்படுகிறது. மனிதர்கள் சாக வேண்டும் என்பது கடவுளுடைய ஆசையல்ல. அவர்கள் சாவில்லாமல் என்றென்றும் வாழ வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை.

முதல் மனிதன் ஆதாமை எந்தக் குறையும் இல்லாமல் கடவுள் படைத்தார். கடவுளுக்கு கீழ்ப்படிந்திருந்தால் ஆதாம் இன்றுவரை உயிரோடு இருந்திருப்பான். ஆனால், செய்யக்கூடாது என்று கடவுள் சொன்ன ஒரு விஷயத்தை அவன் செய்துவிட்டான். அதாவது, பாவம் செய்துவிட்டான். அதனால், ஆதாம் செத்துப்போனான். (ஆதியாகமம் 2:16, 17; 5:5)

மனிதர்கள் எல்லாருமே அவனுடைய பரம்பரையிலிருந்து வந்திருப்பதால் அவனுடைய பாவம் எல்லாருக்கும் வந்துவிட்டது. அதனால்தான், நாம் எல்லாருமே சாகிறோம். (ரோமர் 5:12; 6:23)

அப்படியென்றால், மனிதர்களை சாவிலிருந்து யாரால் மீட்க முடியும்? நாம் எல்லாரும் நம்முடைய பாவங்களுக்கு தண்டனையாகத்தான் சாகிறோம். எனவே ஆதாமின் பரம்பரையில் வந்த எந்தவொரு மனிதனாலும் மற்றவர்களை சாவிலிருந்து மீட்க தன்னுடைய உயிரை மீட்புவிலையாக கொடுக்கமுடியாது.(சங்கீதம் 49:7-9)

இப்படியாக காக்க சர்வவல்லமை படைத்த பரமபிதா இயேசு எனும் தூதரை அனுப்பி வைக்கின்றார்.. அவர் மூலமாக மனிதர்கள் இரட்சிக்கப்படுகின்றார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg