Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டு மக்கள் பொறுமையுடனும் தூர நோக்குடனும் நடந்துகொள்ள வேண்டும்: ரவி ஜயவர்தன

In இலங்கை
Updated: 13:56 GMT, Mar 10, 2018 | Published: 13:56 GMT, Mar 10, 2018 |
0 Comments
1062
This post was written by : Anojkiyan

நாட்டு மக்கள் பொறுமையுடனும் தூர நோக்குடனும் நடந்துகொள்ள வேண்டும் என இலங்கை இலத்திரனில் ஒலிபரப்பாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் சட்டத்தரணி ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கை போன்ற கல்வித் துறையில் முன்னணியிலுள்ள ஒரு நாட்டில் வாழும் நாம், அமைதியின்மையான ஒரு சூழ்நிலை ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக இருந்து செயற்படுவதன் மூலம் நாட்டை அபிவிருத்திப் பாதையில் எடுத்துச் செல்வது இலகுவான ஒன்றாகும்.

பெரும்பாலான மக்கள் இன்று இலத்திரனியல் ஊடகங்களை சுற்றியுள்ளனர். மக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயங்களை சரியாக இனங்கண்டு, இதன் பிறகு இதுபோன்ற ஒரு சம்பவம் இடம்பெறாத வண்ணம் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg