Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மருத்துவத்தில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய கண்டுபிடிப்பு!

In
Updated: 14:50 GMT, Mar 10, 2018 | Published: 14:50 GMT, Mar 10, 2018 |
0 Comments
1108
This post was written by : Puvanes

நவீன தொழில்நுட்பம் செல்லும்பாதை அதி வேகமானது. குறிப்பாக 21 ஆம் நூற்றாண்டில் அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறிப்படத்தக்க மாற்றத்தைப் பெற்றிருந்தது.

இந்த அதீத வளர்ச்சி மருத்துவத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்பதை சொல்லியே ஆகவேண்டும். மனிதன் வளர்ச்சியடைய ஆரம்பித்த நாள் முதலாகவே அவனோடு நோய்களும் வளர்ந்தன அதில் இருந்து மனித குலத்தை காக்க மருத்துவத்தோடு தொழில்நுட்பமும் கைகோர்த்துள்ளது.

அந்தவகையில் ஓர் புதிய நவீன கண்டுபிடிப்பே வெட்டுப்பட்ட உடலை ஒட்டவைக்கும் பசை….

உடல் தோல் வெட்டுப்பட்ட காயம் மற்றும் சத்திர சிகிச்சையின் போது ஏற்படும் காயம் போன்றவற்றினை ஒரு நிமிட நேரத்தில் ஒட்டவைக்கும் பசை ஒன்றினை பொஸ்டன் விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.

வெட்டுக் காயங்களை தைக்கும் முறையிலேயே அதிகமான சிகிச்சை முறைகள் இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்தநிலையில் அதற்கு மாற்றீடாக வெட்டுக்காயங்களை 60 செக்கன்களுக்குள் ஒட்டவைக்கும் முறையில் நவீன விதமான பசை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Metro எனப்படும் குறித்த பசையினை தோல் காயங்களுக்கு மட்டுமல்லாமல் உடலினுள் ஏற்படும் காயங்களுக்கும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறிப்பிட்டளவு காயங்களுக்கு மாத்திரமே இதனைப் பயன்படுத்தமுடியும் எனவும் பாரிய அளவிலான காயங்களுக்கு இதனைப் பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இப்போது இல்லாவிடினும் கூடிய விரையில் அதற்கும் ஓர் தீர்வினை நவீன அறிவியல் பெற்றுத் தரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg