Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கின் பெருஞ்சமரை வென்றது யாழ்.மத்திய கல்லூரி!

In
Updated: 15:28 GMT, Mar 10, 2018 | Published: 15:28 GMT, Mar 10, 2018 |
0 Comments
1210
This post was written by : Litharsan

யாழ். மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் வருடாந்த கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இதில் யாழ்.மத்திய கல்லூரி அணி ஒரு விக்கெட்டால் வெற்றிப்பெற்று, கடந்த இரண்டு வருடங்களாக யாழ்.பரியோவான் கல்லூரியிடம் இருந்த கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்.பரியோவான் கல்லூரி அணி முதல் இனிங்சில் 217 ஓட்டங்களைப் பெற்றிருந்தது, பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய யாழ்.மத்திய கல்லூரி அணி 328 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து தமது இரண்டாவது இனிங்ஸூக்காக துடுப்பெடுத்தாடிய யாழ்.பரியோவான் கல்லூரி 219 ஓட்டங்களை பெற்றது.

அந்தவகையில் போட்டியின் இறுதி நாளான இன்று யாழ்.பரியோவான் கல்லூரி தமது இரண்டாவது இனிங்ஸில் பெற்ற 109 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய யாழ்.மத்திய கல்லூரி அணி 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

யாழ்.மத்திய கல்லூரி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் மதுஷான் 75 பந்துகளை எதிர்கொண்டு 53 ஓட்டங்களை பெற்றார். யாழ்.பரியோவான் கல்லூரி சார்பில் பந்து வீசிய கபில் ராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக மதுஷான் தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg