Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாதனையுடன் திரில் வெற்றியை பதிவு செய்தது பங்களாதேஷ் அணி!

In கிாிக்கட்
Updated: 17:46 GMT, Mar 10, 2018 | Published: 17:46 GMT, Mar 10, 2018 |
0 Comments
2374
This post was written by : Anojkiyan

சுதந்திரக் கிண்ண முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரின் இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது லீக் போட்டியில், பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளால் சாதனை வெற்றியை பதிவுசெய்தது.

இந்த வெற்றியானது ரி-ருவென்ரி போட்டியொன்றில், பங்களாதேஷ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் பெற்றுக்கொண்ட அதிக்கூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நான்காவது இடமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) கொழும்பு ஆர்.பிரேமேதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணியின் அதிகபட்ச ஓட்டமாக குசல் பெரேரா 74 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து 215 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக முஷ்பிகுர் ரஹிம் ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதோடு, போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார். பந்து வீச்சில் நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை, இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் மூன்று அணிகளும் தலா ஒரு வெற்றிகளை பதிவுசெய்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg