Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறும்: ராஜ்நாத் சிங்

In இந்தியா
Updated: 04:24 GMT, Mar 11, 2018 | Published: 02:49 GMT, Mar 11, 2018 |
0 Comments
1107
This post was written by : Ravivarman

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பாரிய வெற்றிபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் – லக்னோ தொகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஹோலி விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்றுள்ளதுடன், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நிச்சயம் வெற்றி பெறும்.

மேலும் திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. அதுபோல நாகலாந்து மற்றும் மேகாலயாவில் கூட்டணி ஆட்சியில் இடம்பிடித்துள்ளது’ என அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg