Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏவுகணைச் சோதனையை நிறுத்துவதாக வடகொரியா உறுதியளிப்பு –ட்ரம்ப்

In
Updated: 04:57 GMT, Mar 11, 2018 | Published: 04:57 GMT, Mar 11, 2018 |
0 Comments
1171
This post was written by : Suganthini

வடகொரியா ஏவுகணைச் சோதனைகளை நிறுத்துவதாக உறுதியளித்துள்ளதென, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள டுவீட்டர் செய்தியிலேயே, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், என்னைச் சந்திக்க முன்வந்துள்ள நிலையில், ஏவுகணைச் சோதனைகளை நிறுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

வடகொரியா கடந்த 2017ஆம் ஆண்டு நொவம்பர் 28ஆம் திகதிக்குப் பின்னர் ஏவுகணைச் சோதனைகளை நடத்தவில்லையென்பதுடன், இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையில் சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில், ஏவுகணைச் சோதனைகளை நடத்தமாட்டோமெனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், அவர்கள் தமது உறுதிமொழியை மதித்து நடப்பார்களென நாம் எதிர்பார்க்கின்றோம்’ என்றார்.

‘தற்போது வடகொரியா சிறந்ததொரு நிலைப்பாட்டில் நடந்துகொள்வதாகவும், இதன் மூலம் சிறந்த இலக்கை அடைய முடியுமென்று  நாம் எண்ணுகின்றோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் வடகொரிய ஜனாதிபதி கிம்முக்குமிடையிலான சந்திப்பு, எதிர்வரும் மேயில் நடைபெறுமென செய்திகள் வெளியானபோதும், இவர்களுக்கிடையிலான சந்திப்புத் தொடர்பான திகதியை இதுவரையில் வெள்ளை மாளிகை வெளியிடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg