Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பப்புவா நியூகினி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியூஸிலாந்து உதவி

In உலகம்
Updated: 05:48 GMT, Mar 11, 2018 | Published: 05:48 GMT, Mar 11, 2018 |
0 Comments
1187
This post was written by : Suganthini

பப்புவா நியூகினியின் போர்கெரா பகுதியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, நியூஸிலாந்து அரசாங்கம் நிவாரணப்பொருட்களை அனுப்பிவைத்துள்ளது.

கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி, மேற்படி பகுதியில் 7.5 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் சுமார் 100 பேர் உயிரிழந்ததுடன், பல மக்கள் தமது உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள சுமார் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு உடனடியாக உணவு மற்றும் குடிநீர் வசதி, சுகாதார வசதி தேவைப்படுவதாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கடந்தவாரம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி உணவு, குடிநீர் உட்பட  18 தொன் அவசர உதவிப்பொருட்களை வழங்கியுள்ளதாக, நியூஸிலாந்தின் பாதுகாப்பு அமைச்சு நேற்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg