Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈ.பி.டி.பியிலிருந்து விலகிச் சென்றவர்கள் புதிய கட்சியை உருவாக்க நடவடிக்கை

In இலங்கை
Updated: 07:28 GMT, Mar 11, 2018 | Published: 07:28 GMT, Mar 11, 2018 |
0 Comments
1098
This post was written by : Yuganthini

ஈ.பி.டி.பி அமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைந்து புதிய கட்சி ஒன்றை உருவாக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்பொருட்டு புதிய கட்சியை பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் உதவியை பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் புதியக்கட்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோரும் அங்கம் வகிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், புதிய கட்சி ஒன்றை பதிவு செய்வதற்கு வேண்டிய விடயங்கள் தொடர்பில், கொழும்பு தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் பெற்றுள்ளார். இதன்வாயிலாக புதிய கட்சி தோற்றம் பெறபோகின்றமை உறுதியாகியுள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூ­ராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுயேட்சையாக மு.சந்திரகுமார் போட்டியிட்டு, கணிசமான வாக்குகளைப் பெற்று, 19 உறுப்பினர்களை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg