Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட சீனா விருப்பம்

In
Updated: 12:49 GMT, Mar 11, 2018 | Published: 07:38 GMT, Mar 11, 2018 |
0 Comments
1243
This post was written by : Suganthini

அமெரிக்காவுடன் வர்த்தகப்போரைத் தொடங்க சீனா விரும்பவில்லையென்பதுடன், அந்நாட்டுடன் இணைந்து செயற்படவே சீனா விரும்புவதாக, சீன வர்த்தக அமைச்சர் Zhong Shan தெரிவித்துள்ளார்.

பீஜிங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையில் வர்த்தகப்போர் தொடங்குவதன் காரணமாக அமெரிக்கா, சீனா உட்பட உலக பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்துமே தவிர, வேறொன்றையும் ஏற்படுத்தாது’ என்றார்.

எனவே,’எமது நாட்டினதும் மக்களினதும் நலன்களைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில், எந்தவிதச் சவால்கள் எமக்கு எதிராக வந்தாலும், அவற்றை எம்மால் சமாளிக்க முடியும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் காணப்படும் வர்த்தகத் தளம்பல் கட்டமைப்பான ஒன்றெனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மூலம் வேறுபாடுகளைக் களைந்து பரஸ்பர நன்மையைப் பெற்றுக்கொள்ளவும், இரு நாடுகளினதும் மக்களுக்கு நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கவும், பூகோளமயமான பொருளாதாரக் கட்டமைப்பின் நிலையான வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்யவும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட சீனா தயாராகவுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg