Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கி வான், கடல் எல்லைகளை மீறுவதாக கிறீஸ் குற்றச்சாட்டு

In
Updated: 10:06 GMT, Mar 11, 2018 | Published: 08:33 GMT, Mar 11, 2018 |
0 Comments
1139
This post was written by : Suganthini

தமது நாட்டு வான் மற்றும் கடல் பாதுகாப்பு எல்லைகளை துருக்கி மீறுவதாக, கிறீஸ் பாதுகாப்பு அமைச்சர் பனோஸ் கமெனோஸ் (Pயழெள முயஅஅநழெள) குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரான்ஸ் பத்திரிகையொன்றுக்கு நேற்று (சனிக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போது, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘எமது வான் மற்றும் கடல் பாதுகாப்பு எல்லைகளை துருக்கி மீறுவதாகவும் இதன் காரணமாக, துருக்கியுடன் கிறீஸ் முரண்படும் அபாயம் காணப்படுகின்றது’ என எச்சரித்துள்ளார்.

மேலும், ‘கிறீஸ் வான் மற்றும் கடல் பாதுகாப்பு எல்லை மீறப்படும்போது, துருக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தத்துக்கு உள்ளாக நேரிடும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

‘கிறீஸிடமிருந்து மாத்திரமன்றி, ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் எமது எல்லைகளைப் பாதுகாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg