Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பானில் ஆழிப்பேரலைத் தாக்கம்: 7 வருடங்கள் பூர்த்தி

In உலகம்
Updated: 09:59 GMT, Mar 11, 2018 | Published: 09:59 GMT, Mar 11, 2018 |
0 Comments
1211
This post was written by : Suganthini

ஜப்பானில் ஆழிப்பேரலை மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டு 7 வருடப் பூர்த்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் திகதி ஜப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலை மற்றும் 9.0 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் காரணமாக, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பலர் தமது வசிப்பிடங்களை விட்டு வெளியேறினர்.

இந்தச் சம்பவம் அந்நாட்டில் மறக்க முடியாத வகையில் பாரிய அழிவை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து டோக்கியோவில் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டதுடன், இதில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி மற்றும் மலரஞ்சலி செலுத்தப்பட்டன.

மேலும், இந்தப் பாரிய அசம்பாவிதத்தால் பாதிக்கப்பட்ட 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில் வசித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg