Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ நாவும், என் ஜி ஓவும்

In
Updated: 10:17 GMT, Mar 15, 2018 | Published: 10:18 GMT, Mar 11, 2018 |
0 Comments
1190
This post was written by : Puvanes

ஐ நா வின் 37 கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இலங்கை விவகாரம் சம்பந்தமாக என்ன முனேற்றம் நடக்கப்போகின்றது , போரால் பாதிப்புற்ற மக்களுக்கான தீர்வு ஐ. நா வின் மூலம் கிடைக்குமா என்றெல்லாம் அங்கலாய்க்கும் இவ்வேளையில் ஐ.நாவை பற்றியும் அதன் பொறுப்பு பற்றியும் பலரும் பலவிதமாக தொடர்ந்து பேசுவதையும் ஐ.நாவை குற்றம் சாட்டுவதையும் காலாகாலமாக செவி மடுக்க முடிகிறது.

அது மாத்திரமல்ல தொடர்ந்தும் அரச சார்பற்ற நிறுவனங்களின் மீதும் பல வகையான குற்றசாட்டுக்கள் சுமத்துபட்டுகொண்டே வருகிறது. அகவே நாம் ஐ.நா என்றால் என்ன, மனித உரிமைகளை பாதுகாப்பதில் மேம்படுத்துவதிலும் ஐ.நா வின் பங்கு என்ன என்றும், அது எவ்வாறு இயங்குகிறது, ஐ.நாவின் வரையறை என்னவென்றும் அதே போல் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பு ஐ.நாவில் எப்படி பட்டது என்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மனித உரிமையை பாதுகாப்பத எவ்வகையான செயல்பாடுகளை ஐ.நாவில் செய்யலாம் என்பதை உடற்று நோக்கல் அவசியம் ஆகின்றது.

முதலாவதாக ஐ.நா என்பது பல அங்கத்துவ நாடுகளை உள்ளடக்கிய ஒரு நிறுவனம். இது சுயமாக எந்த விடயம் சம்பந்தமாகவும் சுயமாக முடிவு எடுக்க முடியாத சிக்கலான அமைப்பு.

ஐ. நா பிரதானமாக மூன்று நோக்கங்களை நிறைவேற்றுவனவாக காணப்படுகின்றது அவையாவன சமாதானத்தையும் பாதுக்காப்பையும் குறிக்கோளாகக் கொண்ட பாதுகாப்பு சபை இது நியூ யோர்க்கில் உள்ளது, பொருளாதார சமூக காரணிகளை மேம்படுத்தும் பாதுகாக்கும் பொருளாதார சமூக சபை, மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் மேம்படுத்தவும் ஜெனிவாவில் இருக்கும் மனித உரிமைகள் சபையாவன.

இதைதவிர சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் இதில் அடங்கும் இது நெதர்லாந்து நாட்டில் உள்ளது.

இந்த கட்டுரையில் நாம் மனித உரிமைகள் சபையை மட்டும் எடுத்து ஆராய்வோம். மனித உரிமைகள் சபை 15 அம திகதி பங்குனிமாதம் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது, இதற்கு முதல் இது மனித உரிமைகள் ஆணையகம் என்ற பெயரில் இருந்தது.

மனித உரிமைகள் சபையானது தனி நபர் மனித உரிமை மீறல்களை கையாள மாட்டாது மாறாக நாட்டின் நிலைமை தொடர்பாக அல்லது விடயம் சம்பந்தமாக கண்காணிப்பர், அறிக்கை இடுவர்.

உதாரணமாக சிறுவர், மகளிர் விவகாரம், விஷேட தேவைக்கு உட்பட்டவர்கள் போன்ற குழுக்களின் மனித உரிமை நிலைகள், அல்லது சிறுபான்மையினரின் பிரச்சினை அல்லது ஒரு இனத்தின் பிரச்சினை சம்பந்தமாக கண்காணிப்பர், அறிக்கை இடுவர் கூடவே சிபாரிசுகளையும் வழங்குவர்.

இந்த அறிக்கைகள் பாதுகாப்பு சபையிலும் அறிக்கை இடப்பட்டு நிலைமை பாதுகாப்பு சபையின் அங்கத்துவ நாடுகளால் ஆராயப்பட்டு தேவை ஏற்படின் தீர்மானங்கள் நிறைவேற்றுபடும்.

ஐ. நா மனித உரிமை சபை அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் களமே. ஐ. நாவின் பணியாளர்கள் உள்ளனர், துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்கள் உள்ளனர், கூடவே அரச சார்பற்ற நிறுவனங்களும் ஐ. நா வின் உள்ளடங்குவர்.

மனித உரிமைகள் சபையில் 47 உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அவை ஐந்து பிராந்தியமாக பிரிக்கபட்டுள்ளன. 13 ஆபிரிக்க நாடுகள் 13ஆசிய நாடுகள் , 6 கிழக்கு ஐரோபிய நாடுகள் 8 இலத்தீன் அமெரிக்க கரீபியன் நாடுகள் மற்றும் 7 மேற்கு ஐரோபிய நாடுகள்.

இந்த அங்கத்துவ நாடுகள் பாதுகாப்பு சபையில் இருக்கும் அங்கத்துவ நாடுகளால் நடக்கும் பொது பொதுக்கூட்டத்தில் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும். இந்த வாக்கெடுப்பு மூன்று வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும்.

அங்கத்துவ நாடுகளுக்கு தொடர்ந்து இரு முறை அங்கத்துவம் பெறும் வாய்ப்பு உள்ளது. அங்கத்துவ நாட்டின் பிரதிநிதியாக நாட்டின் தலைவர் இங்கு சமூகமளிப்பார் அல்லது அரசால் அவருக்கு பதிலாக அனுப்பப்படுபவர் மட்டுமே சமூகமளிக்கலாம், தவிர எதிர் கட்சி தலைவர்களோ அல்லது மற்றைய கட்சி தலைவர்களோ அங்கே சமூகமளிக்க முடியாது.

அனால் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதியாக மட்டுமே மனித உரிமைகள் சபையில் கலந்து கொள்ள முடியும் உரையாற்ற முடியும் என்பதை நாம் தெளிவாக புரிந்து வைத்திருப்பது அவசியம்.

எங்களுக்கு தெரியும் பல அரசியல்வாதிகள் நாங்கள் ஐ. நா விற்று சென்றோம் அங்கு எம் மக்களின் நிலை பற்றி குரல் எழுப்பினோம் என்று கூக்குரல் இடுவார்கள் அனால் இவர்கள் அரச சார்பற்ற நிறுவனத்தின் அடையாளத்துடனேயே அங்கே பேசுவார்கள் என்பதை தெரிந்திருத்தல் அவசியம்.

முக்கியமாக மனித உரிமை சபையில் முக்கியமாக செயலாற்றுபவர்கள் நான்கு பிரிவினர் , அரசின் பிரதிநிதி, ஐ. நாவின் பணியாளர்கள், ஐ. நாவின் விஷேட நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவங்கள் மட்டுமே.

ஐ. நாவில் பங்கேற்கும் அரச சார்பற்ற நிறுவங்கள் அங்கே பொருளாதார சமூக சபையில் அங்கீகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்த அங்கீரத்தை பெற முடியாது அனால் மனித உரிமை சபைக்கு போக விரும்பினால் அங்கீகாரம் பெற்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் ஊடாகத்தான் அங்கு நுழைய முடியும் என்பதை கட்டாயம் ஞாபகத்தில் வைத்திருத்தல் அவசியம்.

மனித உரிமை சபையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் வகிபாகமும் தலையீடுகளும்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் அங்கத்துவ நாட்டின் பிரதான நபர்களை, ராஜ தந்திரிகளை, ஐ. நாவின் பணியாளர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களை சந்தித்து ஒரு நாட்டின் மனித உரிமை நிலைமை குறித்து சிபாரிசுகளை அறிக்கைகளை சமர்பித்து அவர்கள் அந்தந்த நாட்டின் மனித உரிமை சம்பந்தமாக பேசுவதற்கு அழுத்தம் கொடுப்பார்கள்.

உதாரணமாக காணாமல் ஆக்கபட்டவருக்கான விடயத்தை ஆராய்வதற்கு குழு உள்ளது, அந்த குழுவை சந்தித்து பேசுவார்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான தகவல்களையும் அறிக்கைகளையும் கொடுப்பார்கள் , கூடவே காணாமல் ஆக்கப்பட்டவரின் குடும்ப அங்கத்தவர்களையும் ஜெனிவாவுக்கு அழைத்து சென்று குழு அங்கத்துவர்களிடமும், ராஜ தந்திரிகளுடனும், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அக்கறை செலுத்தும் நாட்டின் அரச பிரமுகருடனும் நேரடியாக பேசுவதற்கு ஆவனை செய்வர்.

மற்றும் பக்க நிகழ்வுகளை, கூட்டங்களை ஏற்பாடு செய்து அதில் சம்பந்தபட்ட அரசுடன் விடயம் தொடர்பாக கலந்துரையாட சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவர். இந்த மேடையில் பாதிக்கப்பட்ட மக்கள் விடயம் சம்பந்தமான நிபுணர்கள், மற்றும் குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக அக்கறை செலுத்தும் மனித உரிமை நிறுவனங்கள், நாடுகள் போன்றவர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்வதோடு கேள்விகளிலும் கேட்டு தங்களுக்கு வேண்டிய விளக்கத்தை பெற்று கொள்வர்.

முக்கியமாக இலங்கை விவகாரங்களை எடுத்துகொண்டால், ஜெனிவாவில் இருக்கும் இலங்கை தூதரகத்தில் இருந்து ஒருவர் கட்டாயம் கலந்து கொள்வார். கூடவே இலங்கையில் இருந்து அரசின் சார்பாக செல்பவர்களும் இங்கே சமூகமளிப்பர், சொல்லபட்ட கருத்துக்கு தகவலை எதிர்த்தும் காரசாரமான விவாதங்களும் நடக்கும். இவை யாவும் ஒலி ஒளி வடிவங்களில் பதிவு செய்யப்படும் கூடவே தேவையான மொழிபெயர்ப்பு வசதியும் செய்யப்படும்.

மற்றும் அசர சார்பற்ற நிறுவனங்கள் எழுத்துமூல அறிக்கையை ஐ. நா வில் சமர்ப்பித்து அந்த அறிக்கைகளின் மூலம் சிபாரிசுகளையும் வழங்குவர். கொடுக்கபட்ட அறிக்கைகள் மறைக்கபடாமலும் பார்த்து கொள்வர்.

இதையெல்லாம் அறியாமல் நம்மவர் அரச சார்பற்ற நிறுவனங்களையும் மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் தகவல் எடுத்து மேற்குலகத்துக்கு விற்று பணம் சம்பாதிக்கிறார்கள் என்று ஒயாமல் குற்றம் சாட்டுகின்றனர்.

2015 முன் காணாமல் ஆக்கபட்டோர் , ராணுவத்தால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டோர் போன்றவர்களின் விபரங்களை திரட்டி அறிக்கை எழுதி கொடுப்பது உயிர் ஆபத்து மிக்க செயலாக இருந்தது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், அது மாத்திரமில்லை இது பற்றி பக்க நிகழ்வுகளில் பேசும் தலையிடும் மனித உரிமை ஆர்வலர்கள் அல்லது சிவில் அமைப்புக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்தே இந்த சேவையை செய்கின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே நேரம் உயிராபத்து வரவேண்டும் அதை சாக்காக வைத்து அரசியல் புகலிடம் பெறலாம் என்ற நோக்கில் ஐ. நா செல்பவர்களையும் ஞாபகப்படுத்தல் அவசியம்.

இது தவிர மனித உரிமை சபையில் வாய்மூல அறிக்கைகளையும் சமர்பிப்பார் இதற்காக ஒரு நிமிடமோ அல்லது இரு நிமிடம் தான் சிவில் அமைப்புக்களுக்கு வழங்கப்படும். அது மாத்திரமல்ல ஐ. நா வில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுக்கான தேர்தல் நடைபெறும் போது சிவில் அமைப்புக்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஒரு நாடு அங்கத்துவம் பெறாமல் இருக்கவோ அல்லது அங்கத்துவம் பெறவோ மற்றைய நாடுகளிடம் சம்பந்த பட்ட நாட்டுக்கு வக்களிக்க வேண்டாம் என பிரசாரம் செய்வர்.

உதாரணமாக 2008 இல் தேர்தல் நடந்த நேரம் இலங்கைக்கு சார்பாக வாக்களிக்க வேண்டாம் என்று இலங்கை மனித உரிமை ஆர்வலர்கள் அமைப்புக்கள் கடுமையாக பிரசாரம் செய்ததால் இலங்கை உறுப்புரிமையை இழந்தது.

இது போன்று பல அரும் பெரும் சேவையை சிவில் அமைப்புக்களும் மனித உரிமை நிறுவனங்களும் , மனித உரிமை செயற்பாட்டாலர்களும் தொடர்ந்தும் செய்து வருகின்றனர்.

மனித உரிமை சபை பாதுகாப்பு சபை எவ்வாறு இயங்குகின்றது என்பதை இன்னுமொரு கட்டுரையில் பார்ப்போம்.

கடைசியாக நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். வைத்தியசாலைக்கு செல்பவர்கள் அனைவரும் நோயாளிகளும் அல்ல, மத ஸ்தலங்களுக்கு செல்பவர்கள் எல்லாம் பக்திமான்களும் அல்ல. அதே போல் மனித உரிமை சபைக்கு செல்பவர் எல்லாரும் மனித உரிமையில் அக்கறை கொண்ட மனித உரிமை ஆர்வலர்களும் அல்ல, நிறுவனங்களும் அல்ல என்பதையும் ஞாபகத்தில் வைத்திருத்தல் அவசியமாகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)