Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2 இலட்சம் இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஜப்பான்!

In வணிகம்
Updated: 10:48 GMT, Mar 11, 2018 | Published: 10:48 GMT, Mar 11, 2018 |
0 Comments
1070
This post was written by : Litharsan

இரண்டு இலட்சம் இந்திய தொழிநுட்பத்துறை இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து ஜப்பானில் பணிக்கமர்த்த திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் ஜெட்ரோ அமைப்பின் துணைத்தலைவர் ஷிஜிகி மாட்டா தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜப்பான் நாட்டின் வர்த்தக அமைப்பும் மற்றும் பெங்களூர் வர்த்தக அமைப்பும் இணைந்து பெங்களூரில் ஏற்பாடு செய்திருந்த கூட்டுறவு கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அதிநவீன தொழிநுட்பம் மற்றும் அதிவிரைவான தொழிநுட்ப விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்குத் திறமைவாய்ந்த வல்லுநர்கள் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகவும் அவர்களுக்கு ஜப்பானிய குடியுரிமை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இந்திய தொழிநுட்ப வல்லுநர்களை பணியில் அமர்த்துவதனால் ஜப்பானின் புதிய தொழிநுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg