Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீன் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்!

In இலங்கை
Updated: 11:37 GMT, Mar 11, 2018 | Published: 11:33 GMT, Mar 11, 2018 |
0 Comments
1170
This post was written by : Litharsan

நாட்டின் மீன் உற்பத்தியை இந்தாண்டில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில் 2018 இல் மீன் உற்பத்தியை 8 இலட்சத்து 12 ஆயிரம் மெற்றிக் தொன் வரை உற்பத்திசெய்ய திட்டமிட்டுள்ளாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரவிர அண்மையில் தெரிவித்தார்.

இதில் ஆழ்கடல் மீன்பிடியில் 4 இலட்சத்து 34 ஆயிரம் மெக்ரிக் தொன்னும், நீர்வாழ் உயிரினச் செய்கையின் ஊடாக ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மெக்ரிக் தொன்னும் மற்றும் நன்னீர் மீன்பிடி மூலம் 2 இலட்சத்து 38 ஆயிரம் மெக்ரிக் தொன்னும் உற்பத்திசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் புதிய தொழிநுட்ப உதவிகளுடன் கூடிய படகுகளை அறிமுகப்படுத்துவதோடு, மீன்பிடியின் பின்னரான பாதுகாப்பு மற்றும் குளிரூட்டல் வசதிகள் தொடர்பான முறைமைகள் தொடர்பிலும் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன் 50 சதவீத சலுகை அடிப்படையில் மீனவர்களுக்கு நவீனத்துவ படகுகளை வழங்கவும், மீனவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg