Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊதிய உயர்வை மறுக்கும் அரச மருத்துவர்கள்!

In கனடா
Updated: 11:34 GMT, Mar 11, 2018 | Published: 11:33 GMT, Mar 11, 2018 |
0 Comments
1050
This post was written by : Elakkiya

கியூபெக்கில் ஊதிய உயர்வை அரச மருத்துவர்கள் மறுத்துள்ளனர்.

கியூபெக் நகர அரச மருத்துவர்களுக்கு அண்மையில் ஊதிய உயர்வு வழங்கப்பட்ட நிலையில் அதனை மறுத்துள்ள அவர்கள், தேவைக்கேற்ப அதிகபடியான வருமானம் பெறுவதால் ஊதிய உயர்வு தேவையில்லை என மருத்துவ சபையில் தெரிவித்துள்ளனர்.

அது தொடர்பாக அரச மருத்துவர்கள் வழங்கிய மனுவில்,  “மருத்துவமனைகளில் பணியாற்றும் தாதியர்களும், அலுவலக ஊழியர்கள் பலரும் கடுமையாக உழைக்கின்றனர். தாதியர் பற்றாக்குறையும் அதிகமாக உள்ள நிலையில் வேலைப்பளு காரணமாக அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். எமது சக ஊழியர்கள் இவ்வாறான சூழ்நிலையில் சிக்கித்தவிக்கும் போது நாம் எவ்வாறு ஊதிய உயர்வை ஏற்றுக் கொள்ள முடியும். அதனால் ஊதிய உயர்வு எமக்கு தேவையில்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg