Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரபாகரனின் மரணம் உணர்த்திய உண்மை! – வெளிப்படுத்தினார் ராகுல்

In இந்தியா
Updated: 11:23 GMT, Mar 11, 2018 | Published: 11:23 GMT, Mar 11, 2018 |
0 Comments
1313
This post was written by : Varshini

இலங்கை ராணுவத்தினர் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தின் மூலம் உணர்ந்துகொண்டதாக காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

தென்கிழக்காசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, சிங்கப்பூரிலுள்ள இந்திய முகாமைத்துவ கல்வி நிறுவனத்தின் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்தார்.

குறிப்பாக பிரபாகரனின் மரணத்தின் மூலம் இரண்டு விடயங்களை உணர்ந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார். இலங்கை ராணுவத்தினர் ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டனர் என சிந்தித்ததாகவும், அவருக்காகவும் அவரது குழந்தைகளுக்காகவும் வேதனை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

வன்முறையை தாண்டி பிரபாகரன் ஒரு மனிதன். அந்தவகையில் அவருக்காக அவரது குழந்தைகள் மிகவும் வேதனையடைந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டதோடு, அவ்வாறான ஒரு வேதனையை தனது தந்தையின் மரணத்தின்போது தானும் அனுபவித்ததாக ராகுல் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg