Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் மாற்றம்: ஆயுட்கால ஜனாதிபதியாக ஜின்பிங்!

In
Updated: 11:39 GMT, Mar 11, 2018 | Published: 11:39 GMT, Mar 11, 2018 |
0 Comments
1140
This post was written by : Suganthini

சீன ஜனாதிபதி தொடர்ந்து பதவியில் இருப்பதற்கான அரசியலமைப்பு திருத்த ஒப்பந்தத்துக்கு, அந்நாட்டின் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேசிய மக்கள் காங்கிரஸின் வருடாந்தக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றபோது, இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், 2 ஆயிரத்து 958 பேர் ஆதரவாக வாக்களித்துள்ள அதேவேளை, 2 பேர் எதிராக வாக்களித்துள்ளனர். 3 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. மேலும், ஒரு வாக்கு செல்லுபடியற்றதாகவும் இருந்ததாகவும், சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.

இதன் மூலம் சீன ஜனாதிபதியாக ஒருவர் 2 தடவைகளுக்கு மேல் பதவி வகிக்கக்கூடாதென்ற கட்டுப்பாட்டை தேசிய மக்கள் காங்கிரஸ் தளர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக தற்போது சீன ஜனாதிபதியாகவுள்ள ஸி ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருப்பதற்கு வாய்ப்புக் காணப்படுவதாகவும், சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg