Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். வங்கி பண மோசடி: கைதுசெய்யப்பட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

In இலங்கை
Updated: 04:48 GMT, Mar 12, 2018 | Published: 02:15 GMT, Mar 12, 2018 |
0 Comments
1174
This post was written by : Anojkiyan

யாழ்ப்பாணத்தில் அரசாங்க வங்கியொன்றுக்கு கொண்டுவரப்பட்ட பணம் மாயமான சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவர்களை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி அநுராதபுரம் பிரதேச வங்கியொன்றில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கியொன்றுக்கு கொண்டுச்செல்லப்பட்ட 11,074,000 ரூபாய் பணத்தில் 8,020,000 ரூபாய் பணம் மாயமானது.

தேநீர் அருந்துவதற்காக இடையில் வாகனத்தை நிறுத்திய போதே குறித்த பணம் திருட்டு போயிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில், 56, 43, 24 மற்றும் 23 வயதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg