Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் மோதும் இலங்கை மற்றும் இந்தியா

In கிாிக்கட்
Updated: 05:12 GMT, Mar 12, 2018 | Published: 03:13 GMT, Mar 12, 2018 |
0 Comments
1179
This post was written by : Velauthapillai Kapilan

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கிடையான முத்தரப்பு T-20 போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. அதன்படி  இன்று (திங்கட்கிழமை) இடம்பெறும் 4வது போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.

நடைபெற்று முடிந்த மூன்றாவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சினை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் துடுபெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்களை எடுத்தது. இதனையடுத்து, 215 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி அதிரடியாக ஆடி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ஓட்டங்கள் பெற்று வெற்றி இலக்கை எட்டியது.

தற்போது 3 அணிகளும் 1-1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg