Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கிய விமானம் ஈரானில் விபத்து: 11 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 03:13 GMT, Mar 12, 2018 | Published: 03:13 GMT, Mar 12, 2018 |
0 Comments
1159
This post was written by : Suganthini

துருக்கிக்குச் சொந்தமான தனியார் விமானமொன்று ஈரானில் விபத்துக்குள்ளானதில், 11 பேர் உயிரிழந்துள்ளதாக, துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு ராச்சியத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் பகுதிக்குச் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி விமானம், ஈரானின் மேற்குப் பகுதியான ஷார் ஈ கோர்ட் (Shahr-e Kord) மலைப்பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விபத்துக்குள்ளானது.

மேற்படி விமானம் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் பாரிய தீப்பிழம்புடன் வெடித்துச் சிதறியதாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

மேற்படி விமானத்தில் பிரபல வர்த்தகரொருவரின் 28 வயதுடைய மகளும் அவரது 7 நண்பர்களும் 3 விமானிகளும் பயணித்துள்ளனர்.

மேற்படி வர்த்தகரின் மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், டுபாயில்; விருந்துபசார நிகழ்வொன்றில் அவரது நண்பர்களுடன் கலந்துகொண்டுவிட்டு திரும்பியபோதே, இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

மேலும், விமானம் விபத்துக்குள்ளான வேளையில், அடை மழை மற்றும் பலத்த காற்று வீசிக்கொண்டிருந்ததாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg