Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹிலாரி கிளின்டன் இந்தியா விஜயம்

In இந்தியா
Updated: 05:05 GMT, Mar 12, 2018 | Published: 05:05 GMT, Mar 12, 2018 |
0 Comments
1148
This post was written by : Kemasiya

முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளின்டன், இந்தியாவிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி விமான நிலையத்தை சென்றடைந்த அவர் அங்கிருந்து இந்தூர் நகருக்கு புறப்பட்டார்.

இன்று அவர் பல சுற்றுலாத் தளங்களுக்கு செல்லவுள்ளதோடு, இந்தூர் அருகே உள்ள கோட்டை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்,  நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றை பார்வையிடவுள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் டெல்லியில் இருந்து இந்தூர் செல்வதற்கு முன்னர், புதுடெல்லியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ஹலாரி உரையாற்றியிருந்தார். இதன்போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் கொள்கைகள் என்பன குறித்து அவர் பல விடயங்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg