Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்நாட்டு மக்களை போராட்டக் களத்திற்கு அழைக்காதீர்கள்! – ஸ்டாலின்

In இந்தியா
Updated: 07:00 GMT, Mar 12, 2018 | Published: 04:31 GMT, Mar 12, 2018 |
0 Comments
1123
This post was written by : Varshini

ஹைட்ரோ காபன் எடுப்பதற்கு தமிழக அரசு மீண்டும் அனுமதியளிக்க முன்வந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதென தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களை கடுமையாகப் பாதிக்கும் இவ்வாறான எதிர்மறை செயற்றிட்டங்களை முன்னெடுத்து, தமிழக மக்களை மத்திய அரசு மீண்டும் போராட்டக் களத்திற்கு அழைக்கக் கூடாதென குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாமென கூறியுள்ளார்.

ஹைட்ரோ காபன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டுமென ஏற்கனவே பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக ஹைட்ரோ காபன் எடுப்பதற்காக இந்தியா முழுவதும் ஆய்வு செய்வதற்கான சர்வதேச கேள்வி மனுவை கடந்த ஜனவரி மாதம் 19ஆம் திகதி மத்திய அரசின் ஹைட்ரோ காபன் இயக்குநரகம் வெளியிட்டது. இதனைக் கண்டித்து ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.

காவிரி பிரச்சினையில் ஏற்கனவே மக்களுக்கு துரோகம் இழைத்துவரும் மத்திய அரசு, மக்கள் மீது மீண்டும் இவ்வாறு ஒரு பிரச்சினையை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்டுள்ளார். இதனால் விவசாயம் முற்றாக அழிக்கப்பட்டு தமிழ் நாட்டை பாலைவனமாக மாற்றும் முயற்சியிலேயே அரசாங்கம் ஈடுபடுகின்றதென ஸ்டாலின் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மக்களை கடுமையாக பாதிக்கும் ஹைட்ரோ காபன் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் ஹைட்ரோ காபன் திட்டத்தை கைவிடுமாறு கோரி தமிழகத்தின் நெடுவாசல் மற்றும் கதிராகமங்களம் உள்ளிட்ட பல பிரதேச மக்கள் கடந்த ஒரு வருட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg