Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உயிர்சேதம்!

In இந்தியா
Updated: 12:31 GMT, Mar 12, 2018 | Published: 05:57 GMT, Mar 12, 2018 |
0 Comments
1182
This post was written by : Kemasiya

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், மூன்று தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

அனந்தநாத் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு இடம்பெற்ற தேடுதல் வேட்டையின்போது இடம்பெற்ற மோதலிலேயே மேற்படி தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

தீவிரவாதிகளுக்கும் படையினருக்குமிடையில் சிலமணி நேரம் மோதல் நீடித்தமையினால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளது. குறித்த பகுதியில் தொடர்ந்தும் படையினர் தேடுதல் வேட்டையில்  ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

காஷ்மீரை அண்டிய  பகுதிகளில் தொடர்ந்தும் தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அவ்வப்போது பொதுமக்களும் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. இதனால்  அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதேவேளை, தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசே ஆயுதங்கள் வழங்குவதாவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பெப்ரவரி மாதம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg