Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியாவில் ரசாயன ஆயுதப் பாவனை: அமெரிக்கா கண்டனம்

In
Updated: 05:55 GMT, Mar 12, 2018 | Published: 05:55 GMT, Mar 12, 2018 |
0 Comments
1214
This post was written by : Suganthini

ரசாயன ஆயுதப் பாவனை தொடர்பாக, சிரிய அரசாங்கத்துக்கு அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜேம் மட்டிஸ் எச்சரித்துள்ளார்.

ஓமானுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜேம் மட்டிஸ், தலைநகர் மஸ்கட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சிரியாவின் தற்போதைய நிலைமை தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அவர், “சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதலின்போது, சிரிய அரசாங்கப் படையினர் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றமை புத்திசாலித்தனமற்ற நடவடிக்கையாகும்” என்றார்.

மேலும், சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதலின்போது, குளோரின் வாயுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்தபோதும், குளோரின் வாயுத் தாக்குதல் இடம்பெற்றமைக்கான தெளிவான ஆதாரங்கள்  கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கிழக்கு கௌட்டாவில் போராளிக் குழுவினருக்கும் சிரிய அரசாங்கப் படையினருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுவரும் நிலையில், குளோரின் வாயுத் தாக்குதல் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதற்குப் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளரின் மேற்படி கருத்து வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg