Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா பிரதேச செயலகத்தில் 17 கிராம அலுவலர்களுக்கு பதவி வெற்றிடம்!

In இலங்கை
Updated: 09:45 GMT, Mar 12, 2018 | Published: 06:46 GMT, Mar 12, 2018 |
0 Comments
1104
This post was written by : Anojkiyan

வவுனியா பிரதேச செயலகத்தில் 17 கிராம அலுவலர்களுக்கு பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “வவுனியா பிரதேச செயலக பிரிவில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது. குறிப்பாக எமது பிரதேச செயலகத்தில் 17 கிராம அலுவலர்களுக்கான வெற்றிடம் காணப்படுகின்றது. இந்த ஆளணி நிரப்பப்படாமையால் எமது சேவைகளை இலகுவாக செயற்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

இதனைக் கருத்திற்கொண்டு பிரதேச அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்கள், கிராம அலுவலர் வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg