Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புனே சிட்டியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பெங்களூர் எப்.சி

In விளையாட்டு
Updated: 09:25 GMT, Mar 12, 2018 | Published: 07:25 GMT, Mar 12, 2018 |
0 Comments
1196
This post was written by : Velauthapillai Kapilan

இந்தியன் சூப்பர் லீக்  (ஐ.எஸ்.எல்.) 4 வது கால்பந்தாட்டப் போட்டியில் பெங்களூர் எப்.சி. அணி புனே சிட்டியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

பெங்களூர் எப்.சி. மற்றும் புனே சிட்டி அணிகளுக்கு இடையிலான முதலாவது அரை இறுதியின் 2ஆவது சுற்று பெங்களூரில் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.

இதில் பெங்களூர் அணித்தலைவர் சுனில் சேத்ரி 15 வது நிமிடத்தில் முதலாவது கோலினை அடித்தார்.

அதனைத்தொடர்ந்து பதிலுக்கு கோல் பெற போராடிய புனே அணிக்கு 82 வது நிமிடத்தில் அதற்குரிய சந்தர்ப்பம் அமைந்தது. அதன்படி புனே அணிசார்பில்  ஜோனதன் லூக்கா அணிக்காக ஒரு கோலினை அடித்தார்.

போட்டி சூடுபிடிக்க, புனே அணியினர்  65 வது நிமிடத்தில்  ‘பெனால்டி’ வாய்ப்பை பயன்படுத்தி சுனில் சேத்ரி 2 வது கோலினை அணிக்காக பெற்றுக்கொடுத்தார். பின்னர் மேலும் ஒரு கோல் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

போட்டியின் இறுதியில் பெங்களூர் எப்.சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் புனே சிட்டியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் களமிறங்கியது.

இதனை அடுத்து அரையிறுதியின் 2-வது சுற்று நாளை சென்னை மற்றும் கோவா அணிகளுக்கு இடையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.  இதில் வெற்றிபெறும் அணி 2ஆவது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg