Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிதியொதுக்கீடு குறைப்பு: படைவீரர்களுக்கு அச்சுறுத்தல்!

In
Updated: 08:33 GMT, Mar 12, 2018 | Published: 08:01 GMT, Mar 12, 2018 |
0 Comments
1152
This post was written by : Suganthini

வரவு –செலவுத்திட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கான நிதியொதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதால், படைவீரர்கள் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் அபாயம் காணப்படுவதாக பிரித்தானியாவின் முன்னாள் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் அலெக்ஸ் பேர்டன் (Alex Burton) தெரிவித்துள்ளார்.

இதனைக் கருத்திற்கொண்டு பாதுகாப்புப் படைவீரர்களுக்கான நிதியொதுக்கீட்டை உடனடியாக அதிகரிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பி.பி.சி. ஊடகசேவைக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலின்போது, அவர் இதனைக் கூறியதாக குறித்த ஊடகம் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. குறித்த நேர்காணலில் அவர் மேலும் குறிப்பிடுகையில்:-

“தற்போது பலமான ராணுவச் சக்தியாகத் திகழும் எமது படைவீரர்கள், நிதியொதுக்கீடு குறைப்புக் காரணமாக உலகளாவிய ரீதியில் ஆபத்தான நிலைமையை எதிர்கொண்டுள்ளனர்.

ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து ராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்துக் காணப்படும் அதேவேளை, இணையவழித் தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg