Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரிட்டிஷ் கொலம்பியா சிறுவன் மரணம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை!

In கனடா
Updated: 08:35 GMT, Mar 12, 2018 | Published: 08:35 GMT, Mar 12, 2018 |
0 Comments
1048
This post was written by : Anojkiyan

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 14 வயது சிறுவன் ஒருவர், குளியல் தொட்டிக்குள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

எனினும், சிறுவனின் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தோன்றவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார், இச்சிறுவன் எவ்வாறு உயிரிழந்தார் என்பதை கண்டறிய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை ரொறன்ரோவைச் சேர்ந்த 14 வயது சிறுவன், லேக் லூயிஸ் பகுதியில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் பயணிக்க வேண்டிய தூரத்தில் உள்ள கோல்டன் எனப்படும் நகரில் உள்ள சுடுநீர் நிரம்பிய குளியல் தொட்டிக்குள் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

குறித்த சிறுவனின் உயிரிழப்பு சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள இதேவேளை, சிறுவனின் இறுதிக் கிரியைக்கான நடவடிக்கைகளிலும் பொதுமக்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg