Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்ய உளவாளி விவகாரம்: சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்வு

In
Updated: 12:02 GMT, Mar 12, 2018 | Published: 09:16 GMT, Mar 12, 2018 |
0 Comments
1152
This post was written by : Suganthini

ரஷ்யாவின் முன்னாள் உளவாளியும் அவரது மகளும் மயக்கமடைந்த சம்பவம் தொடர்பாக, பிரித்தானியாவின் Salisbury பகுதியிலுள்ள ஹோட்டலொன்றின் சில செயற்பாடுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்கிர்பாலும் (வயது 66) மற்றும் அவரது மகள் யூலியாவும் (வயது 33) Salisbury பகுதியில் மயக்கமடைந்த நிலையில், கடந்த 4ஆம் திகதி மீட்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் பொலிஸார், மேற்படி ஹோட்டலின் சில செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்திருந்தனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக சில தடயங்களைப் பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளதைத் தொடர்ந்து, குறித்த ஹோட்டலில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது ஆடைகளைக் கழுவ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளிக்கும் அவரது மகளுக்கும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் வகையில் நச்சு வேதிப்பொருள் ஊட்டப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையில், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக பிரித்தானிய ஊடகங்களும் அரசியல்வாதிகளும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg