Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்!

In சினிமா
Updated: 10:03 GMT, Mar 12, 2018 | Published: 10:03 GMT, Mar 12, 2018 |
0 Comments
1297
This post was written by : Vithushagan

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `வர்மா’ படத்தில் பிரபல நடிகை கௌதமியின் மகள் சுப்புலட்சுமி நாயகியாக நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெலுங்கில்சிறந்த வெற்றியை பெற்ற `அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்துக்கு `வர்மா’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் நாயகி தெரிவு நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

துருவ் ஜோடியாக நடிக்க `சில்லுனு ஒரு காதல்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷ்ரியா சர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில், 90-களில் முன்னணி நாயகியாக வலம் வந்த கவுதமியின் மகள் சுப்புலட்சுமி துருவ் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

பின்னர் `அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்த ஷாலினி பாண்டே தமிழ் ரீமேக்கிலும் நடிப்பதாக சில தகவல்கள் வெளியானது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg