Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒஸ்ரியாவில் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு

In
Updated: 10:12 GMT, Mar 12, 2018 | Published: 10:12 GMT, Mar 12, 2018 |
0 Comments
1072
This post was written by : Suganthini

ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவிலுள்ள வெளிநாட்டுத் தூதரங்கள் மற்றும் ராஜதந்திர அலுவலகங்களுக்கு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒஸ்ரியாவுக்கான ஈரானியத் தூதுவரின் இல்லத்துக்கு அருகில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

ஈரானியத் தூதுவரின் இல்ல வளாகத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த படைவீரரொருவரை, இனந்தெரியாத நபரொருவர் கத்தியால் குத்த முற்பட்டதாகவும், இதன்போது, குறித்த நபரை அப்படைவீரர் துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

26 வயதுடைய ஒருவரே, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg