Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் சட்டவிரோத இறைச்சி விற்பனையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Updated: 10:54 GMT, Mar 12, 2018 | Published: 10:54 GMT, Mar 12, 2018 |
0 Comments
1106
This post was written by : poovannan

புங்குடுதீவுப் பகுதிகளில் பசுக்கள் மற்றும் இளங்கன்றுகளைக் கடத்தி இறைச்சிக்காக விற்பதனை நிறுத்தக்கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

புங்குடுதீவுப் பகுதிகளில் இனந்தெரியாதவர்களால் தொடர்ச்சியாக இவ்வாறு இடம்பெறுவதை நிறுத்தக் கோரி ஊர்காவற்றுறை பிரதான வீதியில் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த செயலில் ஈடுபடுவோரை இனங்கண்டு உரிய தண்டனை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டோர் கோஷமிட்டனர்.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் மாடுகளின் உரிமையாளர்களும் ஈடுபட்டனர்.

குறித்தபிரதேசத்தில் வளர்ப்பு மாடுகளை கடத்தும் முயற்சியில் இனந்தெரியாத சிலர் ஈடுபட்டிருந்த வேளை ஊர்காவற்றுறை பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டதும் கடத்தப்பட்ட மாடுகள் கைப்பற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg